அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் வழக்கறிஞர்

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக இதுவரை இல்லாத வகையில் மிக அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆகஸ்ட் 24ஆம் தேதி வேறு எந்த பிரபல நடிகர்களின் படங்களும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர் அறிமுகமாகும் திரைப்படம் விவேகம் படத்துடன் மோதுகிறது. ஆம், 'பப்ளிக் ஸ்டார்' என்ற பட்டத்துடன் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள 'தப்பாட்டம்' திரைப்படம் அதே ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளிவரவுள்ளது. மிஜிபூர் ரஹ்மான் இயக்கியுள்ள இந்த படத்தில் டோனா ரோசாரியா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா அஜித்தின் 'விவேகம்' படத்துடன் மோதுவது குறித்து கூறியபோது, நாங்கள் ரிலீஸ் தேதியை பல நாட்களுக்கு முன்பே அறிவித்துவிட்டோம். இருப்பினும் அஜித் படத்துடன் ரிலீஸ் ஆவதை பெருமையாக கருதுகிறோம் என்று கூறினார்.

மேலும் இந்த படம் விவசாயிகளின் பிரச்சனையை மையப்படுத்திய கதை என்றும் இந்த படத்திற்கு விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் அய்யாக்கண்ணு அவர்கள் வாழ்த்து தெரிவித்ததாகவும் தயாரிப்பாளர் கூறினார்.

More News

மெர்சல் ஆடியோ விழாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தளபதி

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை மிரட்டிய நிலையில் நாளை மறுநாள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் ஆடியோ விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது...

மீண்டும் பிக்பாஸில் ரீஎண்ட்ரி? புதிய ஹேர்ஸ்டைலின் ரகசியம்: ஓவியா பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன உளைச்சல் காரணமாக வெளியேறிய ஓவியா சற்றுமுன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்...

காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்.

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று காலமானார்....

ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை: இயக்குனர் கைது

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை ஒருவர் ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையிலான கருத்துவேறுபாடு கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தில் உள்ளது.