அர்னாப் தலைமையிலான சேனலில் இணையும் தமிழக செய்தியாளர்

  • IndiaGlitz, [Tuesday,February 28 2017]

டைம்ஸ் ஆப் இந்தியா புகழ் அர்னாப் கோஸ்வாமி 'ரிபப்ளிக்' என்ற ஆங்கில தேசிய சேனலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த சேனலில் தமிழ் செய்தி சேனல் தந்திடிவியின் முன்னணி செய்தி ஆசிரியரான ஹரிஹரன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தந்தி டிவியின் சூடுபறக்கும் விவாதங்களை நடத்தி வந்த ஹரிஹரன், முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் உள்ளிட்ட பல சர்வதேச, தேசிய பிரமுகர்களை பேட்டி எடுத்தவர்.
இந்நிலையில் ஹரிஹரன் திடீரென தந்தி டிவியில் இருந்து விலகி அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் சேனலில் இணையவுள்ளார். தமிழ் சேனலில் இருந்து தற்போது தேசிய சேனலுக்கு அவர் செல்வதால் நாடு முழுவதும் அவரது விவாதங்கள் ஒலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜனாதிபதியுடன் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் சந்திப்பு. கோரிக்கைகள் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா ஆதரவு அணி 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும், ஓபிஎஸ் அணிக்கு 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் 12 எம்பிக்களின் ஆதரவு உள்ளதால் வலுவாக அணியாக காணப்படுகிறது.

விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க பணம் கட்டி டோக்கன் வாங்கும் தொண்டர்கள்

பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகின்றார்.

பாலா-ஜோதிகா படத்தின் டைட்டில் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

திமுகவில் இணைந்தார் பிரபல நடிகர்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான ராதாரவி திமுகவில் இணைந்தார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்ட விழாவில் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'மருதநாயகம்' படத்தின் படப்பிடிப்பை கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னையில் நடந்த விழா ஒன்றில் தொடங்கி வைத்தார்