இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி: ராம்கோபால் வர்மாவின் நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஓடிடி பிளாட்பாரத்தில் மாதம் ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது ‘த்ரில்லர்’ என்ற த்ரில் மற்றும் கிளாமர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரிசாவை சேர்ந்த அப்சரா ராணி என்ற நடிகையை அவர் அறிமுகம் செய்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்சராவுக்கு என ஒரு டுவிட்டர் பக்கத்தையும் ராம்கோபால் வர்மா அறிமுகம் செய்து வைத்தார். அந்த பக்கத்தில் அப்சரா தற்போது ’த்ரில்லர்’ படத்தின் கிளாமர் ஸ்டில்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகனாக ராக் காச்சி என்பவரை ராம்கோபால் வர்மா அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில், ‘ஒடிசாவை சேர்ந்த திறமையான அப்சராவை நான் அறிமுகம் செய்ததை போல் தற்போது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராக் என்பவரை அறிமுகம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த டுவிட்டிற்கு பதிலளித்த அப்சரா ராணி, ‘இதுபோன்ற ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு எனது நன்றி என்றும், நாங்கள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம் என்றும் எனக்கு முழு ஆதரவு அளிக்கும் ஒடிசா மக்கள் மற்றும் எனது பெற்றோர்களுக்கு மிகவும் நன்றி என்றும் அப்சரா தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் நாயகன் ராக் உடன் நெருக்கமாக இருக்கும் கிளாமர் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to you for giving us such a big chance and realising we have talent and we are hardworking... Thanks to Odisha and our parents for all the support n Love ❤️ https://t.co/ywFeHrG0cj
— Apsara Rani (@apsara_rani_) July 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments