இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி: ராம்கோபால் வர்மாவின் நாயகி

ஓடிடி பிளாட்பாரத்தில் மாதம் ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது ‘த்ரில்லர்’ என்ற த்ரில் மற்றும் கிளாமர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரிசாவை சேர்ந்த அப்சரா ராணி என்ற நடிகையை அவர் அறிமுகம் செய்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்சராவுக்கு என ஒரு டுவிட்டர் பக்கத்தையும் ராம்கோபால் வர்மா அறிமுகம் செய்து வைத்தார். அந்த பக்கத்தில் அப்சரா தற்போது ’த்ரில்லர்’ படத்தின் கிளாமர் ஸ்டில்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகனாக ராக் காச்சி என்பவரை ராம்கோபால் வர்மா அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில், ‘ஒடிசாவை சேர்ந்த திறமையான அப்சராவை நான் அறிமுகம் செய்ததை போல் தற்போது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராக் என்பவரை அறிமுகம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த டுவிட்டிற்கு பதிலளித்த அப்சரா ராணி, ‘இதுபோன்ற ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு எனது நன்றி என்றும், நாங்கள் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம் என்றும் எனக்கு முழு ஆதரவு அளிக்கும் ஒடிசா மக்கள் மற்றும் எனது பெற்றோர்களுக்கு மிகவும் நன்றி என்றும் அப்சரா தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் நாயகன் ராக் உடன் நெருக்கமாக இருக்கும் கிளாமர் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இப்படிக்கூட நடக்குமா??? எங்களுக்கு வரியப்போட்டு கொரோனாவிற்கு நிதியை எடுத்துக்கோங்க... வியப்பூட்டும் அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் காலத்தில் அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றன

இந்த மாதிரி போக்கிரிகளை தண்டிக்க வேண்டும்: நடிகர் பிரசன்னா ஆவேசம்

கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து முருக பக்தர்கள் உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம்

ராமர் நேபாளி, உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது: நேபாளம் பிரதமரின் சர்ச்சை கருத்து

ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி தற்போதுதான் சாதகமான தீர்ப்பைப் பெற்று உள்ளது.

கொரோனா முடிந்ததும் என் முதல் வேலை இதுதான்: அஞ்சலி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமியின் கொரோனா சோதனை ரிசல்ட்: பரபரப்பு தகவல்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா