மத்திய அரசின் அவசர சிகிச்சைக்கு நன்றி கூறிய கமல்

  • IndiaGlitz, [Thursday,August 17 2017]

மருத்துவம் பயில காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் உண்டா? இல்லையா? என்ற குழப்பம் தீராமல் இருந்ததால் பலரது டாக்டர் கனவு ஏக்கமாகவே இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு உறுதிபட கூறிவிட்டாலும் இந்த ஆண்டு மட்டும் விலக்கு தர, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இதனையேற்று தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் இயற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பியது. சற்று முன் வந்த தகவலின்படி இந்த அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு நீட் விலக்கு கிடைத்துள்ளது. இதனால் நீட் எழுதிய மாணவர்களுக்கு பாதிப்பும், நீட் எழுதாத மாணவர்களுக்கு பலனும் கிடைத்துள்ளது.

இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து கமல்ஹாசன் கூறியபோதும், 'நன்றி NEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே. இனி என்ன செய்வோம்? என்று பதிவு செய்துள்ளார்.

நன்றிNEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே.இனி என்ன செய்வோம்?

— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2017