மத்திய அரசின் அவசர சிகிச்சைக்கு நன்றி கூறிய கமல்

  • IndiaGlitz, [Thursday,August 17 2017]

மருத்துவம் பயில காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் உண்டா? இல்லையா? என்ற குழப்பம் தீராமல் இருந்ததால் பலரது டாக்டர் கனவு ஏக்கமாகவே இருந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு உறுதிபட கூறிவிட்டாலும் இந்த ஆண்டு மட்டும் விலக்கு தர, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இதனையேற்று தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் இயற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பியது. சற்று முன் வந்த தகவலின்படி இந்த அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு நீட் விலக்கு கிடைத்துள்ளது. இதனால் நீட் எழுதிய மாணவர்களுக்கு பாதிப்பும், நீட் எழுதாத மாணவர்களுக்கு பலனும் கிடைத்துள்ளது.

இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து கமல்ஹாசன் கூறியபோதும், 'நன்றி NEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே. இனி என்ன செய்வோம்? என்று பதிவு செய்துள்ளார்.

நன்றிNEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே.இனி என்ன செய்வோம்?

— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2017

More News

ஃபீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வர்றான்: விவேகம் டிரைலர் விமர்சனம்

இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான 'விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த நேற்று நள்ளிரவு திடீரென இந்த படத்தின் டிரைலர் வெளியானது...

சிறுவர் சிறுமியர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் கேம்! தீர்வு என்ன?

மனித வாழ்க்கைக்கு ஆன்லைன், இண்டர்நெட் ஆகியவை எந்த அளவுக்கு உதவி செய்கிறதோ அதே அளவுக்கு இன்னும் சொல்லப்போனால் அதற்கு மேல் உபத்திரமும் செய்கிறது

வதந்திகளை நம்ப வேண்டாம்: லதா ரஜினி பள்ளி நிர்வாகம் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை, ரேஸ் கோர்ஸ் சாலையில் ராகவேந்திரா கல்வி குழுமம் என்ற பெயரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார்.

'மெர்சல்' படத்தின் 'மெலடி' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஆளப்போறான் தமிழன்' பாடல் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் ஒரு சுனாமியை கிளப்பி தற்போதுதான் ஓய்ந்துள்ளது.

கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்த மேலும் ஒரு அமைச்சர்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு மீது வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வரும் அமைச்சர்கள் கமல்ஹாசனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமான கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு அவரை ஒருமையிலும் விமர்சித்து வருகின்றனர்.