உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன்: விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் விஷாலின் பிறந்தநாள் முன் தினம்சிறப்பாக கொண்டாடப்பட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் விஷாலின் காமன் டிபி போஸ்டரையும் ரசிகர்கள் வெளியீட்டு இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்வதாக விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
எனது பிறந்த நாளில் என் பாசத்திற்கும், பெருமைக்குரிய அன்பு ரசிகர்களின் விருப்பத்தின்படி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட என் அன்பான நண்பர்களுக்கு நன்றி. மக்கள் நல இயக்கத்தின் சார்பாக மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை வாரியாக கொரோனா காலத்தில் சமூக இடைவெளியுடன் அரசு கோட்பாடுகளின்படி நீங்கள் செய்த அனைத்து சமூக செயல்பாட்டினை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
மேலும் எனக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், தொலைக்காட்சி அன்பர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்த நாளை சிறப்படையச் செய்கிறது.
கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து நம் மக்களை காப்பது நமது கடமை. இந்தியனாக தேசத்தை பாதுகாப்பது நம் பெருமை. கொரோனாவை ஒழிப்போம்! இயன்றதை செய்வோம்! இல்லாதவர்களுக்கு!!
இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Thanking Everyone From The Bottom Of My Heart....GB pic.twitter.com/C7gW7TeRqg
— Vishal (@VishalKOfficial) August 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments