உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன்: விஷால்

  • IndiaGlitz, [Monday,August 31 2020]

பிரபல நடிகர் விஷாலின் பிறந்தநாள் முன் தினம்சிறப்பாக கொண்டாடப்பட்டதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் விஷாலின் காமன் டிபி போஸ்டரையும் ரசிகர்கள் வெளியீட்டு இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்வதாக விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எனது பிறந்த நாளில்‌ என்‌ பாசத்திற்கும்‌, பெருமைக்குரிய அன்பு ரசிகர்களின்‌ விருப்பத்தின்படி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில்‌ வெளியிட்ட என்‌ அன்பான நண்பர்களுக்கு நன்றி. மக்கள்‌ நல இயக்கத்தின்‌ சார்பாக மாவட்டம்‌, நகரம்‌, ஒன்றியம்‌, பகுதி, கிளை வாரியாக கொரோனா காலத்தில்‌ சமூக இடைவெளியுடன்‌ அரசு கோட்பாடுகளின்படி நீங்கள்‌ செய்த அனைத்து சமூக செயல்பாட்டினை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்‌.

மேலும்‌ எனக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த திரைத்துறையினர்‌, சமூக ஆர்வலர்கள்‌, அரசியல்‌ பெருமக்கள்‌, தொலைக்காட்சி அன்பர்கள்‌ மற்றும் செய்தி தொடர்பாளர்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ நெஞ்சார்ந்த வணக்கத்தையும்‌, நன்றிகளையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. உங்கள்‌ அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு ஆண்டும்‌ என்‌ பிறந்த நாளை சிறப்படையச்‌ செய்கிறது.

கொரோனா எனும்‌ கொடிய நோயில்‌ இருந்து நம்‌ மக்களை காப்பது நமது கடமை. இந்தியனாக தேசத்தை பாதுகாப்பது நம்‌ பெருமை. கொரோனாவை ஒழிப்போம்‌! இயன்றதை செய்வோம்‌! இல்லாதவர்களுக்கு!!

இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிரடி காட்டும் முதல்வர்!!! ரேஷன் பொருட்களை வீட்டுக்கே அனுப்ப புதியத் திட்டம்!!!

நியாய விலைக்கடைகளில்  வழங்கப்படும் பொருட்களை நேரடியாக பொது மக்களின் வீட்டிற்கே கொண்டுவரும் வகையிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என முதல்வர்

இன்னும் இருக்கு… சீனாவுக்கு எதிராக இந்தியாவின் அடுத்த பிளான்!!! என்ன தெரியுமா?

தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் கடந்த 2009 முதல் தீவிரம் அடைந்து வருகிறது.

இது தீப்பிடித்த காடு, பறவைகளே! பத்திரம்: ஊரடங்கு தளர்வு குறித்து வைரமுத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. பேருந்து

உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும்தான் மேட்டரு: செல்வராகவனின் 'கொரோனா' பதிவு

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரனோ வைரஸ் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

கனவுகளுடன் வந்தார், கனவு முடிந்ததும் கிளம்பிவிட்டார்: விஜய்வசந்த் உருக்கமான பதிவு

தனது தந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு பல கனவுகளுடன் வந்தார் என்றும் அவர் தன்னுடைய கனவு அனைத்தையும் நனவானவுடன் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட்டார்