பொறுக்கி தின்னும் அரசியல் கட்சிகள்: பிரபல இயக்குனர் ஆவேசம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான ஊடகங்களும் தேர்தல் செய்திகளுக்கே முக்கியத்தும் தந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் குறித்து காட்டமான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அரசியல் கட்சிகள் என்னும் பெயரில் பொறுக்கித் தினபவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு ஓட்டுகளுக்கு அலையும் கூட்டம் ஒருபக்கம், மக்களின் உண்மை மனநிலையை வெளிப்படுத்தாமல் அவர்களிடமிருந்து பொறுக்கித்தின்பதற்காக சில தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் கருத்துக்கணிக்கணிப்புகள் எனும் பெயரில் நடத்தும் நாடகங்கள் ஒருபுறம் என இதுமட்டும்தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கிடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களின் நிலை போல் கவலையும், துயரமும் தரக்கூடியது வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
தங்கர்பச்சானின் இந்த பதிவு குறித்து இயக்குனர் சேரன் கூறியபோது, 'என்ன செய்யலாம் தங்கர்.... வெறும் எழுத்தும் வேடிக்கையும் இங்கே வேலைக்கு ஆகாது.... என்று கூறியுள்ளார்.
— தங்கர் பச்சான் (@thankarbachan) April 6, 2019
என்ன செய்யலாம் தங்கர்.... வெறும் எழுத்தும் வேடிக்கையும் இங்கே வேலைக்கு ஆகாது.... https://t.co/cKD3FkGSn5
— Cheran Pandian (@cherandreams) April 6, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments