'தேங்க் யூ ஷங்கர் சார்': அதிதி ஷங்கரின் பிறந்தநாள் வாழ்த்து டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் உள்பட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஷங்கரின் இரண்டாவது மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் தனது அப்பாவை ’சார்’ என அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்வில் கூறியிருப்பதாவது:
'என் வாழ்வில் சினிமாவை கொண்டு வந்த இந்த மனிதருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். பான் இந்திய திரைப்படங்களின் முன்னோடி நீங்கள் தான். திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கும். ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஷங்கர் சார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால் எப்போதும் என்னுடன் இருப்பதற்கு நன்றி அப்பா, ஐ லவ் யு என்று தனது வாழ்த்துக்களை அதிதி ஷங்கர் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கார்த்தியுடன் அதிதி ஷங்கர் நடித்த ’விருமன்’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதையடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் ’மாவீரன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் அதிதிஷங்கர் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy Bday to the man who brought cinema into my life!Pan-Indian films’ Pioneer,the way you bring imagination to life on screen is just mesmerising.ThankU for inspiring me every single day @shanmughamshankar sir but bigger ThankU for always being my Appa first
— Aditi Shankar (@AditiShankarofl) August 17, 2022
Love you♥️
Chinnu pic.twitter.com/bV7IT4hQ3I
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com