சப்பாணியும் பரட்டையும் ஏமாற்றுகின்றனர்: தனியரசு எம்.எல்.ஏ

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

அதிமுக கூட்டணியில் இருக்கும் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான தனியரசு எம்எல்ஏ அவர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் ரஜினி கமல் ஆகிய இருவரை சுற்றியே நடக்கின்றது. குறிப்பாக ரஜினிகாந்த் அரசியல் குறித்து என்ன பேசினாலும் அது ஒரு வாரத்திற்கு ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில் அவர் 'அதிசயம் அற்புதம்' குறித்து கூறிய ஒரு கருத்து அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானது மட்டுமின்றி இன்று 2 பெரிய ஊடகங்கள் இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விவாத மேடை நடத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி கமல் ஆகிய இருவர் குறித்து சமீபத்தில் விமர்சனம் செய்யாத அரசியல்வாதிகளே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தற்போது கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு எம்எல்ஏ அவர்கள் ரஜினி கமல் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கருணாநிதி, எம்ஜிஆர் முதல் ரஜினி, கமல், விஜய் என அனைவரும் அரசியலைக் எடுத்து வைத்துள்ளதாகவும், ஒன்று சேர்ந்து வருவதாக ’16 வயதினிலே’ சப்பாணியும் பரட்டையும் ஏமாற்றுகிறார்கள் என்றும், ரஜினி-கமல் இணைந்தால் ஒரு வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியரசு எம்எல்ஏவின் இந்த கருத்துக்கு ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஜினி கமலை எதிர்த்து பேசினால் தான் தங்களுடைய பெயரும் ஊடகங்களில் வரும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு பேசுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 

More News

பேட்ஸ்மேன் கையில் இருந்து நழுவிய கிரிக்கெட் பேட்: 12 வயது சிறுவன் மரணம்

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன் கையிலிருந்து நழுவிய கிரிக்கெட் பேட், சிறுவனின் தலையில் விழுந்து அந்த சிறுவன்  மரணம் அடைந்த பரிதாபமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது 

சினிமா கூத்தாடிகளால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது: சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஆளுமை வெற்றிடத்தை கமல்-ரஜினி கூட்டணி நிரப்பும் என கூறப்பட்டு வரும் நிலையில் அந்த வெற்றிடத்தை சினிமா கூத்தாடிகளால் நிரப்ப முடியாது

பஸ் டிக்கெட் இயந்திரத்தில் ஆபாச வீடியோ: பயணிகள் அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பேருந்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தின் ஸ்க்ரீனில் 30 வினாடிகள் ஆபாச வீடியோ திடீரென திரையிடப்பட்டதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

காளை மாட்டின் மீதேறி டிக்டாக் எடுக்க முயன்ற வாலிபர் பரிதாப பலி!

கோவை அருகே குட்டையில் இருந்த காளை மாட்டின் மீது ஏறி டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் ஒருவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.