ஜெயம் ரவியின் மூன்றாவது 'யூ' சர்டிபிகேட் படம்

  • IndiaGlitz, [Wednesday,August 05 2015]

ஜூன் மாதத்தில் ரோமியோ ஜூலியட், ஜூலை மாதத்தில் சகலகலாவல்லவன் என இரண்டு படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்து உற்சாகமாக இருக்கும் ஜெயம் ரவி நடித்துள்ள 'தனி ஒருவன்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக தயாராக உள்ளது. இந்த படத்தை நேற்று சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர். ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், சகலகலாவல்லவன் ஆகிய படங்களும் 'யூ' சர்டிபிகேட் பெற்ற நிலையில் இந்த படமும் அதே 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


'தனி ஒருவன்' திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டதால் மிக விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக ஜெயம் ரவியுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் அரவிந்தசாமி முதன்முதலாக வில்லனாக கலக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நாசர், வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, சஞ்சனா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'தில்லாலங்கடி' படத்திற்கு பின்னர் ஜெயம் சகோதரர்கள் இணையும் படம் 'தனி ஒருவன்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜீத்-அல்லு அர்ஜூன் நடிக்கும் ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், தென்னிந்தியாவில் மிக அதிக வசூலை கொடுத்த படம், மிகப்பெரிய போஸ்டர் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை செய்த படம்....

ராகவா லாரன்ஸ் இயக்கும் 'நாகா'வில் ஜோதிகா?

எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் அமோக ஆதரவை...

விஜய்யின் 'கத்தி' தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்?

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'கத்தி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இருவேடங்களில் விஜய் மற்றும் சமந்தா நடித்த இந்த திரைப்படம்...

தனுஷ்-சூர்யா இடையே ஏற்பட்ட திடீர் போட்டி

சமீபகாலமாக மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது...

மீனவ பெண் வேடத்தில் விஜய் நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கவுள்ள ரஞ்சித் இயக்கிய முதல் படமான 'அட்டக்கத்தி' என்ற படத்தின் நாயகி நந்திதா ஸ்வேதா...