ஒரே இயக்குனர் மீது தொடர் குற்றச்சாட்டு: 'சர்கார்' கதை விவகாரம் குறித்து தங்கர்பச்சான்

  • IndiaGlitz, [Tuesday,October 30 2018]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' கதை விவகாரம் ஒருவழியாக சமரசமாக தீர்க்கப்பட்டுவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடர்ந்து பலர் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் மீது விழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு முதல்முறையல்ல என்பதுதான் இந்த கடுமையான விமர்சனங்களுக்கு காரணமாக உள்ளது.

இந்த நிலையில் 'சர்கார்' கதை விவகாரம் குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் கூறியபோது, 'தொடர்ந்து ஒரே இயக்குனர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு விழுவது கவனிக்கத்தக்க ஒன்று ஆகும். இதை அவர்தான் சரி செய்து கொள்ள வேண்டும்

மேலும் ஒரு சிந்தனைவாதி கஷ்டப்பட்டு பல வருடங்கள் போராடி ஒரு கதையை உருவாக்கிய நிலையில் அவருடைய கதையை இன்னொருவர் எடுத்துக்கொள்வது என்பது சரியானது அல்ல. ஒருவேளை பயன்படுத்தி இருந்தாலும் நீதிமன்றம் வரை வராமல் ஆரம்பத்திலேயே இதனை சரி செய்திருக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

More News

தனுஷின் 'மாரி 2' குறித்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் நடித்த 'வடசென்னை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓ

அந்த கூட்டத்தில் நான் இல்லை: சர்கார் விவகாரத்திற்கு பின் சாந்தனு டுவீட்

விஜய் நடித்த 'சர்கார்' திரைக்கதையும் வருண் ராஜேந்திரன் பத்து வருடங்களுக்கு முன் எழுதிய செங்கோல் சிறுகதையும் ஒன்றே என்று எழுத்தாளர் சங்கத்தலைவர் பாக்யராஜ் கூறியபின்னர்தான்

கதை என்னுடையதுதான் : ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் கதை குறித்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் இந்த கதையை சொந்தம் கொண்டாடிய

ஸ்டாலின்-ரஜினி தலைமையில் இரு அணிகள் உருவாகும்: கராத்தே தியாகராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அதிகாரபூர்வமாக கட்சியை அறிவிக்கவில்லை என்றாலும் அவருடன் பிரபல அரசியல் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து ஆலோசானை செய்து வருகின்றனர்.

சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை: இந்திய குடியுரிமை பெற சோயிப் மாலிக் சம்மதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிகளுக்கு இன்று காலை 8.20 மணிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.