இளையராஜாவின் இசையை மட்டுமல்ல, இதையும் சுவைத்து பாருங்கள்: தங்கர்பச்சான்
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா ஒரு மிகச் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி சிறந்த பாடலாசிரியர் என்றும் அவருடைய இசையை மட்டுமே சுவைப்பவர்கள் அவருடைய பாடல் வரிகளையும் சுவைத்து பாருங்கள் என்றும் பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தங்கர்பச்சான் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் சேரன் நடிப்பில் உருவாகிய ‘சொல்ல மறந்த கதை’ என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை இயக்குனர் தங்கர் பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
இளையராஜா அவர்களுடன் நான் இணைந்து பணியாற்றிய அனைத்து திரைப்படங்களிலும் பாடல்களை அவரே தான் இயற்றினார். எனது விருப்பத்திற்காக மட்டுமே அவர் அதனை ஏற்றுக்கொண்டார். அவற்றுள் மூன்று பாடல்களை மட்டும் அவர் விருப்பத்திற்கிணங்க பிற கவிஞர்கள் எழுதினார்கள்.
’சொல்ல மறந்த கதை’யில் அனைத்து பாடல்களும் அவர் இயற்றியது தான். அவருடைய இசையை மட்டுமே சுவைப்பவர்கள் பாடல் வரிகளையும் சுவைத்துப்பாருங்கள். மிகச் சிறந்த பாடல் ஆசிரியர் அவர்.
சிவத்தாணு மாமனாரால் அடித்து விரட்டப்பட்டு போக்கிடம் தெரியாமல் அலையும் பொழுது ஆறுதல் அளிக்கும் விதமாக அமைக்கப்பட்ட அவரே பாடிய ‘பணம் மட்டும் வாழ்க்கையா’ பாடலில் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
உலகம் ரொம்ப விரிஞ்சிருக்கு உனக்கு இடம் இல்லையா?
உன் இடத்த எவன் பிடிப்பான்
உறுதி உனக்கு இல்லையா?
ஏர்முனையால் காயம் பட்டா எந்த நிலம் அழகுது?
உழுவதெல்லாம் விளைச்சலுக்கு
உனக்கு நல்ல படிப்பிது.
உழவுதான் நடந்தது
விளைச்சல்தான் இருக்குது”.
#20YearsOfSollaMaranthaKathai#20ஆண்டுகள்_சொல்லமறந்த_கதை @thankarbachan @directorcheran @ilaiyaraaja pic.twitter.com/YRxrDhaL0E
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) November 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments