ஒரு 'கட்' கூட இல்லாமல் சென்சார் சான்றிதழ்.. இயக்குனர் தங்கர் பச்சான் பெருமிதம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் மாறுபட்ட கதை அம்சத்தில் இயல்பான காட்சிகளுடன் படமாக்கும் இயக்குனர்கள் ஒருவர் தங்கர் பச்சான் என்பதும் அவர் தற்போது ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் இந்த படத்தில் ஒரு காட்சியை கூட சென்சார் அதிகாரிகள் கட் செய்யவில்லை என்றும் அவர் பெருமையுடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வந்த ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் நேற்று இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒரு காட்சியை கூட சென்சார் அதிகாரிகள் கட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள தங்கர்பச்சான் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’ ’பள்ளிக்கூடம்’ போன்ற பல காலத்தால் அழியாத காவிய திரைப்படங்களை இயக்கிய தங்கர் பச்சான் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தையும் நிச்சயம் ஒரு சிறப்பான படமாக இயக்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, மஹானா, சஞ்சீவி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், பிரமிட் நடராஜன், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பி.லெனின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
#KarumegangalKalaigindrana certified clean 'U' without a single cut!
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) August 12, 2023
Release Date announcement by tomorrow.@offBharathiraja @menongautham @iYogiBabu @AditiBalan @gvprakash #கருமேகங்கள்கலைகின்றன #ThankarBachan #தங்கர்பச்சான் pic.twitter.com/FUyrglslGC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments