விக்ரம் பிறந்த நாளில் செம அப்டேட்.. 'தங்கலான்' ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் கேஜிஎப் என்ற கோலார் தங்க வயலில் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி விக்ரமின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து அன்றைய தினம் ‘தங்கலான்’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன் தனது சமூக வலைதளத்தை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து விக்ரம் ரசிகர்களுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி செம சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதையும் கொண்ட இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Get ready for something powerful from the world of #Thangalaan!
— Studio Green (@StudioGreen2) April 9, 2023
Witness a slice of flesh on #ChiyaanVikram's birthday
17th April, 2023@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone @thehari___ pic.twitter.com/9FnawFWmzb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments