'தங்கலான்' படத்தின் இரண்டு வார வசூல்.. தயாரிப்பு நிறுவனம் அளித்த ஆச்சரிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் நடித்த’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டு வார வசூல் குறித்த தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது.
விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் என்று இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
100 கோடி ரூபாய் வசூல் என்ற தகவலை புதிய போஸ்டர் உடன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
’தங்கலான்’ திரைப்படத்துடன் வெளியான ’டிமான்டி காலனி 2’ திரைப்படம் 55 கோடி ரூபாய் வசூலானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ’தங்கலான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததை அடுத்து தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ’அரண்மனை 4’ ’மகாராஜா’ ’ராயன்’ உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலை கொடுத்துள்ள நிலையில் மீண்டும் தமிழ் சினிமா வெற்றிப்பாதையை நோக்கி திரும்பி உள்ளதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
A Victorious Triumph for Justice and the People 🔥
— Studio Green (@StudioGreen2) August 30, 2024
The Glorious Epic #Thangalaan Crosses a Humongous ₹100cr+ Gross around the Globe 🤎
🎫 https://t.co/aFyx3Nkpvs #ThangalaanRunningSuccessfully @Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen @OfficialNeelam… pic.twitter.com/dtjUXauRlb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments