'தங்கலான்' டிரைலர் குறித்த சூப்பர் தகவல்.. விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்..!

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ்-க்கு சில மாதங்களுக்கு முன்பே தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அது மட்டும் இன்றி விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘தங்கலான்’ படத்தின் டிரைலர் சென்சார் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ‘தங்கலான்’ சென்சார் குறித்த தகவல் புகைப்படமாக இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், இந்த புகைப்படத்தில் ‘தங்கலான்’ ட்ரைலர் ரன்னிங் டைம் 2 நிமிடம் 12 வினாடிகள் என்று இருப்பதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து விரைவில் ‘தங்கலான்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்த ட்ரெய்லரில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.

 

More News

'டீன்ஸ்' ரிலீஸ் நேரத்தில் திடீரென போலீஸ் புகார் அளித்த பார்த்திபன்.. யார் மீது? என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், தான் இயக்கிய 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தை வரும் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் திடீரென அவர் கோவையில் உள்ள

அரசியல்வாதிகள் மிரட்டலால் இன்று என் படம் வெளியாகவில்லை.. தமிழ் நடிகர் அதிர்ச்சி தகவல்..!

இன்று வெளியாக இருந்த என்னுடைய படம் அரசியல்வாதிகள் மிரட்டலால் வெளியாகவில்லை என்று  பேட்டி அளித்துள்ளது பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஹிட் படம் உட்பட இன்று முதல் 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

திரையரங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் உள்பட 3 தமிழ் படங்கள் மற்றும் சில மற்ற மொழி படங்களும்  இன்று ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ரஜினியின் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. ஆனாலும் ஒரு அதிர்ச்சி தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் முதல் ஷெட்யூல் வெறும்  4 நாட்கள் மட்டும் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி

வெற்றிமாறன் முயற்சியால் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. நாளை ஒரு இன்ப அதிர்ச்சி..!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் முயற்சியால் மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளன.