'தங்கலான்' டைட்டில் பிரிட்டிஷ் காலத்து புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? என்ன அர்த்தம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இந்த டைட்டில் எங்கிருந்து எடுக்கப்பட்டது? என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
பொதுவாக 'தங்கலான்’ என்றால் ஒரு இனத்தின் தலைவன், ஊர்க்காவலன், எல்லை வீரன், மக்களின் பாதுகாப்பாளன் என்று தான் அர்த்தமாக கருதப்படுகிறது. ஆனால் 'தங்கலான்’ என்ற டைட்டில் 1881ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா வெளியிட்ட ’சென்சஸ் ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த புத்தகத்தில் 84 பறையர் இன உட்பிரிவுகள் உள்ளதாகவும் அதில் தமிழ் பேசும் பறையர் இன குழு 59 வது பிரிவாக 'தங்கலான்’ என்ற பிரிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதிலிருந்து தான் இந்த படத்தின் தலைப்பு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தங்கம் இருக்கும் இடம் ஒடுக்கப்பட்ட மக்களின் வசம் இருக்கிறது என்றும் அதை அபகரிக்க அதிகார வர்க்கம் செய்யும் முயற்சி, ஒடுக்கப்பட்ட மக்கள் அதை எப்படி சமாளித்து எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் இந்த 'தங்கலான்’ படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக பா.ரஞ்சித் தனது திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி குறித்து கூறுவார் என்பதும் அதேபோல் 'தங்கலான்’ படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பேசும் ஒரு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout