மாளவிகா மோகனனுக்கு 'தங்கலான்' குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மாஸ் போஸ்டர் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த மாளவிகா மோகனன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் மாளவிகா மோகனனுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ‘தங்கலான்’ படக்குழுவினர் ஒரு மாஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். உடல் முழுவதும் தங்க நகைகள் ஜொலிக்கும் வகையில் இருக்கும் இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
A powerful and modern force redefining herself 🔥
— Studio Green (@StudioGreen2) August 4, 2023
Wishing the fierce and fabulous @MalavikaM_ a wonderful birthday 💖
Here's to a year filled with strength, talent, and empowerment!#HBDMalavikaMohanan #Thangalaan pic.twitter.com/ZYHkH3aQrH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com