மீண்டும் இணையும் 'தங்கலான்' கூட்டணி.. ஆனால் இந்த முறை வேற லெவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘தங்கலான்’ படத்தில் பணிபுரிந்த இரண்டு பிரபலங்கள் மீண்டும் இணைய உள்ளதாகவும் ஆனால் இந்த முறை வேற லெவலில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் மீண்டும் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை பா ரஞ்சித் தயாரிப்பாளராகவும், இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை பா ரஞ்சித் உதவியாளர் அகிரன் என்பவர் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் இன்று முதல் கட்ட படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
ஜிவி பிரகாஷ் உடன் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், ஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A start to a new chapter✨
— Neelam Productions (@officialneelam) February 29, 2024
The shoot for our next production begins today with bright smiles and fond memories🎆
Written and directed by @AkiranMoses
Produced by @beemji #NeelamProductions
Starring @gvprakash @Rshivani1@sreenathbhasi @PasupathyMasi @LingeshActor @EditorSelva… pic.twitter.com/P5KrELtXGX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments