கோலார் தங்க வயலில் 'தங்கலான்' டீம்.. மாஸ் காட்டிய விக்ரம்

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கோலார் தங்க வயல் மற்றும் ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பசுபதி நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பதும் இந்த படம் கோலார் தங்கவயல் பின்னணியாக கொண்ட கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோலார் தங்க வயல் அருகே இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அந்த பகுதியில் உள்ள தமிழர்களை ‘தங்கலான்’ படக்குழுவினர் சந்தித்தனர். குறிப்பாக விக்ரம் தமிழர்கள் மத்தியில் பேசும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.