'இந்தியன் 2', 'புஷ்பா 2' ரிலீஸ் தேதியால் 'தங்கலான்' படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Sunday,May 26 2024]

பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவுக்கு வந்து சரியான ரிலீஸ் தேதிக்காக படக்குழுவினர் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது ’இந்தியன் 2’ மற்றும் ‘புஷ்பா 2’ ஆகிய இரண்டு பான் இந்திய திரைப்படங்கள் ரிலீஸ் தேதிக்கு இடையே ‘தங்கலான்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் ரிலீஸ் தேதிக்கு இரண்டு வாரத்திற்கு பிறகு ’புஷ்பா 2 ’படத்தின் ரிலீஸ் தேதிக்கு இரண்டு வாரத்துக்கு முன்பு இடையில் ஜூலை 25 அல்லது 26 ஆகிய தேதிகளில் ‘தங்கலான்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ‘தங்கலான்’ படத்திற்கு வேறு எந்த பெரிய படமும் போட்டி இருக்காது என்றும் சோலோவாக ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பா ரஞ்சித்தின் கனவுப்படம் மற்றும் சீயான் விக்ரம் உயிரை கொடுத்து நடித்த படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படம் சரியான ரிலீஸ் தேதியில் வெளியானால் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.