இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட 'தங்கலான்': செம அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது தெரிந்தது.
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் ஹாலிவுட் நடிகர் டானியல் கால்டாகிரோன் என்ற் ஹாலிவுட் நடிகர் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்த படம் மிகப்பெரிய பொருள் செலவில் தயாராகி வருகிறது என்பதும் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் மிகுந்த ஆராய்ச்சிக்கு பிறகு திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வரும் இந்த படம் திரையரங்கில் வெளியாகும் போது ரசிகர்கள் புதுவித அனுபவத்தை உணர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி கோலார் தங்க வயலில் 40 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமான ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பை அடுத்து சென்னையில் 15 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடையவுள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திரையரங்கு ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments