'தங்கலான்' ரிலீஸ் தேதி இதுதான்.. இனி அடுத்தடுத்து பல அப்டேட்டுகள்: சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி சில மாதங்கள் ஆன நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளதால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் அந்த படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனதை அடுத்து ’தங்கலான்’ உள்பட சில படங்கள் ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ’தங்கலான்’ ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ உட்பட மேலும் சில படங்கள் இதே தேதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி மட்டுமின்றி அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வரும் என்றும் குறிப்பாக டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா ஆகிய விழாக்களையும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சில மாதங்களாக ’தங்கலான்’ படம் குறித்த எந்த விதமான அப்டேட்டும் இல்லாமல் இருந்ததால் விக்ரம் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் அடுத்தடுத்து இனி இந்த படத்தின் அப்டேட் வரவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தின் சென்சார் பணிகள் ஜூலை மாதம் நடைபெறும் என்றும் அதேபோல் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலரது நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படம் ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

 

More News

மீண்டும் இணையும் 'பார்க்கிங்' கூட்டணி.. ஹரிஷ் கல்யாண் அடுத்த பட அறிவிப்பு..!

ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அதே தயாரிப்பு நிறுவனத்துடன்

இந்திரஜா - கார்த்திக் மட்டுமல்ல.. இன்னும் சில பிரபலங்கள்.. Mr and Mrs சின்னத்திரை' போட்டியாளர்கள் முழு லிஸ்ட்..!

விஜய் டிவியில் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சி இன்று முதல் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சமீபத்தில் திருமணம் ஆன இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் அவரது

முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது: சுந்தர் சி அடுத்த படத்தின் டிரைலர்..!

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா மற்றும் ராஷிகண்ணா நடிப்பில் உருவான 'அரண்மனை 4' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சுந்தர் சி நடிப்பில் உருவான '

'எல்.ஐ.சி' படத்தில் இருந்து அடுத்தடுத்து விலகிய 2 பிரபலங்கள்? இவருக்கு பதில் இவர் யார்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் 'எல்.ஐ.சி' திரைப்படத்தில் அடுத்தடுத்து இரண்டு பிரபலங்கள் விலகியதை அடுத்து, புதிதாக யார் இணையப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

'புறநானூறு' படத்தில் சூர்யாவுக்கு பதில் இந்த மாஸ் நடிகரா? சுதா கொங்கராவின் வேற லெவல் திட்டம்..!

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில்