close
Choose your channels

மீண்டும் தள்ளிப்போகிறதா 'தங்கலான்' ரிலீஸ்? கமல், தனுஷ் காரணமா?

Tuesday, May 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான நிலையில் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்படும் நாள் நெருங்கிய நிலையிலும் இன்னும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படாமல் உள்ளது.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஜூலை மாதமும், ஆகஸ்ட் மாதம் புஷ்பா படமும் ரிலீஸ் ஆக இருப்பதால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே ‘தங்கலான்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.

இந்த நிலையில் ஜூன் மாதம் 27ஆம் தேதி ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம், ஜூலை 13ஆம் தேதி ’இந்தியன் 2’ திரைப்படம் என இரண்டு பெரிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன. இதனை அடுத்து ஜூலையில் தனுஷின்’ ராயன்’ படமும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் 15ஆம் ’புஷ்பா 2’ திரைப்படம் வெளியாக இருப்பதால் இடையில் பெரிய அளவு கேப் இல்லை என்பதால் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment