'தங்கலான்' புதிய ரிலீஸ் தேதி இதுவா? 3 நாட்கள் தொடர் விடுமுறையால் குஷி..!

  • IndiaGlitz, [Wednesday,December 20 2023]

விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்து தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 26 குடியரசு தின விடுமுறையின் போது இந்த படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிய காலதாமதம் ஆகும் என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்றும் கூறப்பட்டது. அது மட்டுமின்றி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ள உள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ’தங்கலான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 29 என்று கூறப்படுகிறது. மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் விடுமுறை என்பதும் தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை என்பதால் இந்த படத்தின் ஆரம்பகட்ட வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வசூலிலும் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

More News

இவங்க மொறைக்கிறாங்க.. என்னை அடிப்பாங்கன்னு நினைக்கிறேன்: விஷ்ணு உறவினர் குறித்து பூர்ணிமா

நான் விஷ்ணுவிடம் சரியாக பேசியதே இல்லை என்று பூர்ணிமா கூற அதற்கு விஷ்ணுவின் உறவினர் முறைக்க 'இவங்க என்ன அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்,

கார்த்திக் நரேன் அடுத்த படத்தின் சென்சார் தகவல். .ரிலீஸ் எப்போது?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

'தளபதி 68' டைட்டில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி.. என்ன சொல்லியிருக்கிறார்?

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

16 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் மீண்டும் இணையும் காமெடி நடிகர்? 'தளபதி 68' புதிய அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் 16 வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைந்துள்ள காமெடி நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

அடிச்சு திருந்தாத பிள்ளையை ஆப்பு வைத்தும் திருத்தலாம்.. நிக்சன் அப்பாவின் கலகல எண்ட்ரி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி  80 ஆவது நாளாக இன்று ஒளிபரப்பாகி வரும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி செல்வதால் கூடுதல் விறுவிறுப்பு இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ளது.