close
Choose your channels

மீதமிருக்கும் 'தங்கலான்' படத்தில் மூன்றரை மணி நேர காட்சிகள்.. விரைவில் ரிலீஸ்?

Sunday, August 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்னும் இந்த படத்தின் மூன்றரை மணி நேர காட்சிகள் இருப்பதாகவும், அவை ஒவ்வொன்றாக டெலிடட் சீன்ஸ்களாக அவ்வப்போது வெளியாகும் என்றும் செய்தி வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படம் எடிட்டர் டேபிளுக்கு ஆறு மணி நேர ஃபுட்டேஜ்களாக வந்ததாகவும் அதன் பின் எடிட்டர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த படத்தை மூன்று மணி நேரத்துக்கு சுருக்கி அதன் பிறகு இயக்குனருடன் ஆலோசனை செய்து இரண்டரை மணி நேர ரன்னிங் டைம் வரும் அளவுக்கு எடிட் செய்து முடித்ததாகவும் கூறப்படுகிறது.

டெலிட் செய்யப்பட்ட காட்சிகளில் சில முக்கிய காட்சிகளும் இருப்பதாகவும், டெலிடட் சீன்ஸ் மட்டும் இன்னும் மூன்றரை மணி நேர காட்சிகள் இருப்பதால் அவை அவ்வப்போது டெலிடட் காட்சிகளாக ஆன்லைனில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’தங்கலான்’ படத்தின் டெலிடட் சீன் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இன்னும் ஏராளமான டெலிடட் டென்ஷன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment