சூப்பர் ஸ்டார் என சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை? 'தங்கலான்' நடிகை கேள்வி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்த நடிகை சூப்பர் ஸ்டார் என்பதில் என்ன பெருமை இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்றுதான் ரசிகர்கள் அழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு சிலர் உரிமை கொண்டாடி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகை பார்வதியிடம் கேள்வி எழுப்பியபோது ’சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது? என்று அவர் எதிர் கேள்வி கேட்டு உள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டார் குறித்து பேசுவது நேர விரயம், அதனால் யாருக்கு என்ன லாபம் என்று தெரிவித்த அவர், ‘சூப்பர் ஸ்டார் என்றால் என்ன என்று எனக்கு புரியவில்லை என்றும் அந்த பட்டம் என்ன இமேஜை ஒரு நடிகருக்கு கொடுக்கிறது என்றும் எனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
‘என்னை ஒரு சூப்பர் ஆக்டர் என்ற கூறினால் நான் மகிழ்ச்சி அடைவேன், மலையாளத்தில் பகத் பாசில், ரீமா கல்லிங்கல், ஆசிப் அலி, ஆகியோர்கள் சூப்பர் ஆக்டர்கள் என்று கூறலாம் என்றும் தெரிவித்தார்.
நடிகை பார்வதியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com