பாகுபலி' கொடுத்த தைரியத்தால் திரைப்படமாகிறது தஞ்சை பெரிய கோவில்
- IndiaGlitz, [Friday,July 24 2015]
இந்தியாவின் பிரமாண்டமான படம், தென்னிந்தியாவிலேயே அதிக வசூல் பெற்ற படம், என்ற புகழை பெற்ற 'பாகுபலி' படத்தின் வெற்றி பல முன்னணி இயக்குனர்களை திரும்பி பார்த்துள்ளது. சரித்திர படம் எடுத்தால் இந்த காலத்தில் எடுபடுமா? என்று தயங்கிய இயக்குனர்களுக்கு இந்த படம் தைரியம் கொடுத்துள்ளது. எனவே கோலிவுட்டில் பேய்ப்பட சீசனை அடுத்து சரித்திர கதைப்பட சீசன் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்நிலையில் இயற்கை, ஈ, பேராண்மை மற்றும் சமீபத்தில் ரிலீஸான 'புறம்போக்கு' ஆகிய படங்களை சமூக அக்கறையுடன் இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், தனது அடுத்த படம் சரித்திரக்கதையாக இருக்க வாய்ப்புள்ளது என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.ஜனநாதன், கடந்த சிலவருடங்களாக தஞ்சை பெரிய கோவில் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும், அவரது அடுத்த படத்தின் கதை அந்த கோவில் கட்டப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. நவீன வசதிகள் இல்லாத 1000 வருடங்களுக்கு முன்பே ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை பார்த்து இப்போது ஆச்சரியப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த கோவிலின் வரலாற்றை எஸ்.பி.ஜனநாதன், போன்றவர்கள் திரைப்படம் எடுத்தால் கண்டிப்பாக அது நல்ல வெற்றியை பெறும் என்றே கூறப்படுகிறது.