'தங்க மீன்கள்' குழந்தை நட்சத்திரம் சாதனாவா இவர்? இளம் குமரியாக வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,April 21 2023]

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான ’தங்க மீன்கள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் ராம் இயக்கி நடித்த ’தங்க மீன்கள்’ என்ற திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராம் மகளாக சாதனா என்ற குழந்தை நட்சத்திரம் அறிமுகமானார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான ’பேரன்பு’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த சாதனா தற்போது இளம் குமரியாக உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சாதனா தனது அப்பா அம்மா உடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து குழந்தை நட்சத்திரம் சாதனாவா இவர்? இளங்குமரியாக மாறிவிட்டார் என கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. இவர் நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் சிறந்தவர் என்பதும் நடன அரங்கேற்றம் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.