close
Choose your channels

இன்று இயக்குனர்கள் சங்க தேர்தல்: வெற்றி பெறும் அணி எது?

Sunday, July 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் சமீபத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்பட பல சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்திருப்பதை அடுத்து இன்று இயக்குனர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறவுள்ள இந்த தேர்தலுக்கு முன்னாள் மாவட்ட நீதிபதி கே.பாலசுப்பிரமணியம் அவர்கள் தேர்தல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 21 பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் 2037 பேர் வாக்களிக்கவுள்ளனர். பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு இன்று இரவுக்குள் புதிய நிர்வாகிகள் யார் என்பது குறித்த விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அணிகள் குறித்த விபரங்கள்:

1. புதுவசந்தம் அணி:

தலைவர் வேட்பாளர்: விக்ரமன்

துணைத்தலைவர் வேட்பாளர்: கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார்

செயலாளர் வேட்பாளர்: ஆர்.கே.செல்வமணி

பொருளாளர் வேட்பாளர்: பேரரசு

இணைச் செயலாளர்கள் வேட்பாளர்கள்: ரமேஷ் கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், அறிவழகன் என்ற சோழன்.

2. புதிய அலைகள் அணி:

தலைவர், செயலாளர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை

பொருளாளர் வேட்பாளர்: ஆ.ஜெகதீசன்

துணைத் தலைவர் வேட்பாளர்: வி.சுப்பிரமணியம் சிவா,

இணைச் செயலாளர்கள் வேட்பாளர்கள்: ஜி.ஐந்துகோவிலான், நாகராஜன், மணிகண்டன் பி.பாலமுரளிவர்மன் மற்றும் ஆ.ராமகிருஷ்ணன்.

மேலும் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக இயக்குனர் ஈ.ராமதாஸ் என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment