தம்பித்துரையும் ஓபிஎஸ் அணியிலா? சசிகலா அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பாக வேலை செய்து கொண்டிருந்தவரும், சசிகலாவின் முழு விசுவாசியுமான தம்பித்துரையும் ஓபிஎஸ் அணிக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு எதிராக செயல்பட்டவர் தம்பித்துரை. ஆனால் அதிமுக பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கும், அவைத்தலைவர் பதவியை செங்கோட்டையனுக்கும் கொடுத்த சசிகலா, தம்பித்துரையை கண்டுகொள்ளவில்லை

இதனால் அவரது தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும், மேலும் ஓபிஎஸ் அணியில் நாளுக்கு நாள் எம்பிக்களின் ஆதரவு அதிகரித்து கொண்டே வருவதாலும், அவரது அணிக்கு தம்பித்துரை செல்லவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

தம்பித்துரை ஓபிஎஸ் அணிக்கு வந்துவிட்டால் கிட்டத்தட்ட அனைத்து எம்பிக்களும் வந்துவிடுவார்கள் என்றும், ஓபிஎஸ் ஆட்சி அமைக்கின்றாரோ இல்லையொ, நிச்சயம் அவரது கட்டுப்பாட்டில் கட்சி வந்துவிடும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

சூர்யாவின் 'சி 3' படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல்கள்

சிங்கம், சிங்கம் 2' படங்களின் வெற்றியை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 9ஆம் தேதி வெளிவந்துள்ள 'சி3' படத்தின் சென்ற வார இறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களள தற்போது பார்ப்போம்

விஜய் படத்தை இயக்குவது எப்போது? இயக்குனர் ஹரி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் கடந்த 9ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஹரி, விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்தது என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

சசிகலாவுக்கு பதவி கிடைக்க சுப்ரீம் கோர்ட் செல்லும் சுவாமி

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு போட்டவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவரவுள்ளது...

ஆளுனர் ஆட்சி அவசியமா? கேப்டன் விஜயகாந்த் கருத்து

தமிழகத்தி ஆட்சி அமைப்பது யார்? என்ற குழப்ப நிலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் நிலவுகிறது. தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களும் இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை. மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் ஆளுனர் முடிவே மத்திய அரசின் முடிவு என்றும் கூறிவிட்டது...

ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவளித்த 3 பிரபல நடிகர்கள்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை ஒரு அமைச்சர், ஐந்து எம்.எல்.ஏக்கள், எட்டு எம்பிக்கள், இரண்டு முத்த நிர்வாகிகள் ஆகியோர் பகிரங்கமாக ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் பல எம்பிக்களும், எம்.எல்.ஏக்களும் ஓபிஎஸ் அவர்களுக்கே ஆதரவு என்றும் அதை தக்க நேரத்தில் அறிவிப்போம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது...