ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் தொடங்கிய 'தம்பி' இசை வெளியீடு!
- IndiaGlitz, [Saturday,November 30 2019]
கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஜோசப் வசந்தா இசையில் உருவாகியுள்ள ’தம்பி’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது
இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், இயக்குனர் ஜீத்து ஜோசப் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த இசை நிமிடம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு விழாக்குழுவினர்களையும் பார்வையாளர்களையும் நடிகர் கார்த்தி கேட்டுக் கொண்டார். அதன்படி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்ற நிர்வாகி நித்தியானந்தா என்பவர் நேற்று சாலை விபத்து ஒன்றில் அகாலமரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற கார்த்தி, நித்தியானந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பினார்
இதனை அடுத்து இன்று நடைபெறும் ’தம்பி’ இசை வெளியீட்டு விழாவில் அந்த ரசிகரின் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கார்த்தி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த தனது ரசிகருக்காக தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த கார்த்தி கேட்டுக் கொண்டது, அவர் தனது ரசிகர்கள் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது