ராஜூவை குறைகூறிய தாமரை: ஜால்ரா அடித்த ஜூலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜுவை குறைகூறி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை பேசியபோது ஜூலியும் ஜால்ரா அடித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தாமரையும் ராஜூவும் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும் தாமரைக்கு பல நேரங்களில் ராஜு அறிவுரைகள் கூறி உள்ளார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராக தாமரை கலந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் ராஜூ மீது நிரூப் மற்றும் ஜூலியிடம் குறை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது .
அந்த வீடியோவில் தாமரை, ‘என் மூத்த மகன் போல ராஜூவை நான் நினைத்திருந்தேன். அவனும் அந்த அளவுக்கு என்னிடம் பாசமாக இருந்தான். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே போன பிறகு எல்லாமே மாறிப் போய்விட்டது. இதுவரை ராஜூ என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்றும் அந்த அவ்வளவு பாசமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் ஏன் இப்படி மாறிவிட்டார்கள் என்று நான் பல நாட்கள் தூங்காமல் இருந்தேன் என்றும் என்னுடைய நிலையை பார்த்து என்னுடைய கணவர் பயந்து விட்டார் என்றும் தாமரை கூறியிருந்தார்.
தாமரையின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜால்ரா அடிப்பது போல், ‘நானும் இதே போல் தான் முதல் சீசனில் இருந்து வெளியே போனவுடன் அனுபவித்தேன் என்று ஜூலி கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சிவகார்த்திகேயனுடன் தன்னுடைய போனில் தான் தாமரையை ராஜூ பேச வைத்தார் என்பது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் உறுதியானது என்றும் ராஜூவுக்கு தாமரையிடம் பாசம் இல்லாவிட்டால் எப்படி அவர் சிவகார்த்திகேயனுடன் பேச வைத்து இருப்பார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Thamarai about RAJU??
— Chimchar (@inferna63786672) February 15, 2022
Thamarai says Raju didn’t treat her the same outside and didn’t call her so how did Thamarai speak to Sivakarthikeyan? ????#BBUltimate #BiggBosstamil #BiggBossTamil5 #priyanka #Raju #BiggbossUltimate #BalajiMurugadoss #Julie pic.twitter.com/w54nxYBS4w
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments