எனக்கு பிக்பாஸ் டைட்டில் வேண்டாம்: தாமரை சொன்னது உண்மைதானா?

எனக்கு பிக் பாஸ் டைட்டில் வேண்டாம் என தாமரை கூறினாலும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் தொடர்ந்து அவர் போராடி வருவது அவர் கூறியது உண்மைதானா என யோசிக்க வைக்கின்றது.

நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் இன்று நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த டாஸ்கில் ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் 4 பேர் மட்டும் உள்ளனர். பிரியங்கா, தாமரை, ராஜூ மற்றும் பாவனி ஆகிய நால்வரில் ஒருவருக்கு டிக்கெட் டு ஃபினாலே கிடைக்கவுள்ளது.

இந்த நிலையில் தாமரையை வெளியேற்ற பிரியங்கா தனது அடுத்த கட்ட பாணியை உபயோகிக்கிறார். ‘உனக்கு டைட்டில் வேண்டுமா? என்று தாமரையை பிரியங்கா கேட்டு உசுப்பேற்ற அதற்கு தாமரை, ‘யாருக்கு டைட்டில் கிடைத்தாலும் எனக்கு சந்தோஷம்தான்’ என்று பதில் கூற இந்த பதிலால் சஞ்சீவ் சற்றே கோபமாக தாமரையிடம் பேசுகிறார்.

சஞ்சீவ்க்கு பதிலளித்து சமாளிக்கும் தாமரையை மீண்டும் பிரியங்கா ’உனக்கு டைட்டில் வேண்டுமா? என்ற கேள்வி கேட்கும்போது, ‘எனக்கு டைட்டில் வேண்டாம்’ என்று அவர் கூறினாலும் அவர் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் தொடர்ந்து நீடித்து வருவதாகவே தெரிகிறது. தாமரையின் யுக்தியை பார்க்கும்போது அவர் இந்த டாஸ்க்கில் மட்டுமின்றி டைட்டிலையும் வென்று விடுவாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.