விஜய் டிவி டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியலில் பிக்பாஸ் தாமரை: குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சீரியலில் பிக்பாஸ் தாமரை நடிக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் புகைப்படங்களுடன் கூடிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேடை நாடகக் கலைஞரான தாமரைச்செல்வி கலந்து கொண்டார் என்பதும் அறிமுகம் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பிரபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பிக்பாஸ் ஜோடி, பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் தாமரை ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் தாமரைக்கு முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் தாமரை நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மாவுடன் தாமரை எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தாமரை இந்த சீரியலில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து ஏன்? மனம் திறந்த காயத்ரி ரகுராம்

நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம், தனது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது ஏன் என்பது குறித்து நமக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இடுப்புக்கு கீழே அறுவை சிகிச்சை செய்தேனா? நடிகை திவ்யபாரதியின் ஆதங்க பதிவு!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சுலர்' என்ற திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் அந்த படத்தில் நாயகியாக நடித்த திவ்யபாரதி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு

'அங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் உயிருக்கு ஆபத்து: 'நயன் தாராவின் 'கனெக்ட்' டிரைலர்

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கனெக்ட்' என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கேட்ச் பிடிக்க சென்ற கிரிக்கெட் வீரருக்கு உடைந்த பற்கள்: மைதானத்தில் நடந்த சோகம்!

கேட்ச் பிடிக்க சென்ற கிரிக்கெட் வீரருக்கு பந்து பட்டதால் பற்கள் உடைந்ததாக வெளிவந்திருக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகையின் காலை வருடி முத்தமிட்ட சர்ச்சை இயக்குனர்: 1 மணி நேர வீடியோ வைரல்

பிரபல சர்ச்சைக்குரிய இயக்குனர் நடிகையின் கால்களை முத்தமிட்ட வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.