சூப்பர் சிங்கர் கானா சிறுவனின் வாழ்வை மாற்றிய இசையமைப்பாளர் தமன்!!

  • IndiaGlitz, [Thursday,October 05 2023]

விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு, சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாக தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் தமன்.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி இசைத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசைத்திறமையுள்ள பலரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9 தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வார எபிஸோடிலும் பல அற்புதமான தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில், பங்கு கொண்ட சிறுவன் கலர் வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தை கனவு காணும் கலர் வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தை தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், கலர் வெடி கோகுல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார் இசையமைப்பாளர் தமன்.

நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்னதாக தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் தமன். கலர் வெடி கோகுலை விமானத்தில் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு படத்திற்காக வாய்ஸ் டெஸ்ட் எடுத்துள்ளார். மேலும் கலர் வெடி கோகுலுக்கு முதல் சம்பளத்தை தந்து அசத்தியுள்ளார். கலர் வெடி கோகுல் பாடப்போகும் பாடல், படம் மற்றும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் விவரங்கள் பின் வரும் வார நிகழ்ச்சிகளில் வெளியிடப்படவுள்ளது.

கலர் வெடி கோகுல் விமானத்தில் பறந்து வாய்ஸ் டெஸ்ட் எடுத்த காட்சிகள், இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய தமனை மனமுருகி அனைவரும் பாராட்டினர். தமன் 'இது கலர் வெடி கோகுலின் திறமைக்குக் கிடைத்த பரிசென்றும் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்வார்' என்றும் பாராட்டினார்.

நிகழ்ச்சி முடிவடையும் முன்னர் கலர் வெடி கோகுல் சினிமா பாடகராக மாறியது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, போட்டியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தை தந்துள்ளது.

திறமையால் ஒளிரும் எளிமையான சிறுவர்களுக்கு ஒரு அற்புதமான மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.

More News

'டாஸ்க்கில் தோத்துட்டா.. பெண் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் அதிர்ச்சி அறிவிப்பு.. ஆண் போட்டியாளர்கள் குஷி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது நாள் இன்று நடைபெறும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் குறித்த அறிவிப்பை பிக் பாஸ் தெரிவித்துள்ளார். இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டால் மேக்கப் பொருட்கள்

சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்.. 'சித்தா' படக்குழுவினரை புகழ்ந்த பிரபல நடிகர்..!

சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் இந்த படத்தின் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பிரபல நடிகர் சித்தார்த் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்

'தலைவர் 170' படத்தில் இணைந்த 'ஜெய்பீம்' ஒட்டுமொத்த குழு.. ஒரே ஒருவர் தான் மாற்றம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' என்ற படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும் நேற்று படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியானது. 

தளபதி விஜய்யின் 'லியோ' சென்சார் சான்றிதழ்.. இதற்கு முந்தைய படங்களுக்கு என்ன சான்றிதழ் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது.

'லியோ' சோலோ ரிலீஸ் இல்லை.. போட்டிக்கு வருகிறது பாரதிராஜா படம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாகும் தினத்தில் வேறு எந்த தமிழ் படமும்