close
Choose your channels

'வாரிசு' படத்திற்காக தமன் செய்த புதுமையான விஷயம்.. செம விருந்து காத்திருக்கு போல!

Saturday, October 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்துக்காக புதுமையான ஒரு விஷயத்தை இசையமைப்பாளர் தமன் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாக தெரிகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதில் 5 பாடல்கள் டூயட் என்றும், இசையமைப்பாளர் தமன் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதத்தில் கம்போஸ் செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’வாரிசு’ திரைப்படத்தில் ஒரு கிராமப்புற பாடல் இருப்பதாகவும் இந்த பாடலுக்கு கிராமப்புறத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்த பாடல் நிச்சயம் கலக்கலாக இருக்கும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. இதனை அடுத்து இந்த பாடல் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment