ஹாலிவுட்டை நோக்கி செல்லும் 'தளபதி 63'
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளதாகவும், இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
கலிபோர்னியாவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் அர்ச்சனா, இயக்குனர் அட்லி மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படத்தில் இருந்து கலிபோர்னியாவில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு, உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.
From Kollywood to Hollywood #Thalpathy63 @Atlee_dir @dop_gkvishnu with my #colorKanadi ???? @ Los Angeles, California https://t.co/ypyLRcE5rH
— Archana Kalpathi (@archanakalpathi) December 5, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com