'தளபதி 66' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும்’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் ஜூன் 22-ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாள் வர இருப்பதை அடுத்து அன்றைய தினம் ’தளபதி 66’ படத்தின் அப்டேட் மற்றும் ’தளபதி 67’ படத்தின் அறிவிப்பு வெளிவரலாம் என்று செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சற்று முன் ’தளபதி 66’ பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, சகோதரர்களாக ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த், தந்தையாக சரத்குமார் ஆகியோர் நடித்து வருவதாகவும் அதுமட்டுமின்றி பிரபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளர. தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
HE IS RETURNING...#Thalapathy66FLon21st #Thalapathy66
— Sri Venkateswara Creations (@SVC_official) June 19, 2022
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/vXddUbOSzA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments