இந்த வருஷம் தல, அடுத்த வருஷம் தளபதி: சூப்பர் அப்டேட்!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே தினத்தில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ படத்துடன் மீண்டும் தல அஜித்தின் படம் மோத உள்ளதாகவும் சினிமாவுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் தல அஜித்தின் ’வலிமை’ படம் ரிலீசாக இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு தளபதி விஜய்யின் ’தளபதி 66’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

‘தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு தீபாவளிக்கு தல அஜித்தின் ’வலிமை’ அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி விஜய்யின் ’தளபதி 66’ படங்கள் வெளியாக உள்ளது அஜித், விஜய் ரசிகர்களுக்கான தீபாவளி விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.