மெர்சலை விட இருமடங்கு: அதிர்ச்சி தரும் 'தளபதி 63' படக்குழு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான 'மெர்சல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக பாஜக தமிழக தலைவர்களின் எதிர்ப்பால் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமானது.
இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒன்று. குறிப்பாக 'ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. இந்த படத்தின் பாடல்கள் ரூ.2.5 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்பதால் ஆடியோ நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஆடியோ உரிமையை பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்பதால் 'தளபதி 63' படத்தின் பாடல் உரிமையை பெற பிரபல ஆடியோ நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் 'மெர்சல்' ஆடியோ உரிமையின் விலையை விட இருமடங்கு அதாவது ரூ.5 கோடி கேட்டு தயாரிப்பு தரப்பு ஆடியோ நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாம். தமிழ்த்திரையுலகில் பல படங்களின் மொத்த விற்பனையின் தொகையே ரூ.5 கோடி என்ற நிலையில், இந்த விலைக்கு 'தளபதி 63' படத்தின் ஆடியோ உரிமை விற்பனையானால் உண்மையில் அதுவொரு பெரிய சாதனைதான் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout