'தளபதி 63' பாடல் குறித்து அட்லியின் பதிவு!
- IndiaGlitz, [Sunday,June 09 2019]
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே தயாராகிவிட்டதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாடல் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த பாடல் கம்போஸிங் மற்றும் ரிகார்டிங் பணிகளின்போது எடுத்த ஒரு புகைப்படத்தை அட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அட்லி மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியில் இருந்து வரும் அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது
'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் படக்குழுவினர் தற்போது புரமோஷன் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் ஃபர்ஸ்ட்லுக், அதனையடுத்து டீசர், டிரைலர், இசை வெளியீடு என அனைத்திற்கும் இப்போதே தயாரிப்பு தயாரிப்பு திட்டமிட்டு வருகிறது. வரும் தீபாவளி திருநாளில் இந்த படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
View this post on InstagramA post shared by Atlee (@atlee47) on Jun 8, 2019 at 10:46am PDT