close
Choose your channels

'தளபதி 63' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

Friday, January 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 63' படத்தை இயக்கும் இயக்குனர் அட்லி கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கவனித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் பூஜை ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி அன்று முதல் படப்பிடிப்பும் தொடங்கும் என்றும், முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு, உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment