தளபதி 63: இன்று முதல் தொடங்கிய முக்கிய பணி

  • IndiaGlitz, [Wednesday,November 28 2018]

தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில், டி.முத்துராஜ் கலை இயக்கத்தில், ரூபன் படத்தொகுப்பில், அனல் அரசு ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் ஊருவாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் செட்டிங்ஸ் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்கான பூஜையில் கலை இயக்குனர் முத்துராஜ் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்த படத்தின் பணி இன்று முதல் அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டது.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் 2019 தீபாவளி தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மன்னிப்பு கேட்க முடியாது, உத்தரவாதமும் தரமுடியாது: ஏ.ஆர்.முருகதாஸின் தைரியமான முடிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் அரசின் விளம்பர பொருட்களை விமர்சிக்கும் வகையில் காட்சி இருந்ததால் அந்த காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

என்னை பாஜகவில் இருந்து நீக்க தமிழிசைக்கு உரிமையில்லை: காயத்ரி ரகுராம்

சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கான விளக்கத்தை காயத்ரி தெளிவாக கூறிவிட்டபோதிலும் தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகிறது.

திரைப்படம் ஆகிறது சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் இருந்தவர் நடிகர் சந்திரபாபு.

'2.0' சிட்டிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிகழ்வு நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது தான் நடக்கின்றது.

ஐஸ்வர்யாவை அடுத்து மகத்துடன் ஜோடி சேர்ந்த யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இணைபிரியாத தோழிகளாக மாறிவிட்ட ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.