'மாஸ்டர்' முதல் நாள் முதல் காட்சி பார்த்த தளபதி விஜய்: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,January 15 2021]

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்தது என்பது முதல் நாளே இந்த படம் உலகம் முழுவதும் ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போதும் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் இந்த படத்தை பார்ப்பதற்காக ஞாயிறு வரை ரசிகர்கள் முன் பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 'மாஸ்டர்’ திரைப்படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை தமிழ் திரை உலகில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் பார்த்து தங்களுடைய பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்களும், சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் கடந்த 13ஆம் தேதி காலை 7 மணிக்கு முதல் நாள் முதல் காட்சியை பார்த்த தகவல் தற்போது வெளிவந்ததோடு, இதுகுறித்த சிசிடிவி வீடியோவும் வைரலாகி வருகிறது.

சென்னை தேவி திரையரங்கில் தளபதி விஜய் படம் பார்க்க வரும் காட்சிகளும், திரையரங்கு உரிமையாளர்கள் அவரை வரவேற்பதுமான காட்சிகளும், அந்த சிசிடிவி காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் முதல்வர்

மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: கைதட்டி கொண்டாடிய கமல்!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தப் பொதுத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் மய்யம் மையம் கட்சி போட்டியிடுகிறது

நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரம்: தமிழ் நடிகரின் பொங்கல் பதிவு!

தமிழ் திரையுலகில் ஹீரோ, குணசித்திர கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகர்களில் ஒருவராகிய ராஜ்கிரண், தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பொங்கல் வாழ்த்தில்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாதா??? என்ன காரணம்?

அவசர கால அடிப்படையில் இந்தியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது