தளபதி விஜய்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த ஒரே பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு இதே நாள் பாரத பிரதமர் நரேந்திரமோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். கருப்புப்பணத்தை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தொலைக்காட்சியில் பேசினார்
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் எத்தகைய விளைவு ஏற்படும், இதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அரசு என்ன முன்னேற்பாடுகள் செய்துள்ளது என்று தெரியாமல் பலர் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் உள்ளிட்டோரும் பாராட்டியவர்களின் பட்டியலில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அப்பாவி ஏழை மக்கள் பாதித்தது குறித்து பேசிய ஒரே நடிகர் விஜய் தான். இந்த நடவடிக்கை நாட்டிற்கு தேவைதான் என்றாலும் அதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டிய அவசியத்தை விஜய் தனது பேட்டியில் உணர்த்தினார். சில நாட்கள் கழிந்தவுடன் தான் இந்த நடவடிக்கையால் பெரிய பயன் இல்லை என்றும், பொதுமக்களுக்கு மட்டுமே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதையும் அனைவரும் உணர்ந்தனர். இருப்பினும் கமல் மட்டுமே தான் தெரியாமல் பாராட்டு தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டு கொண்டார்.
அரசு ஒரு நடவடிக்கை எடுக்கும்போது அதன் விளைவுகள் குறித்து அறியாமல் கண்மூடித்தனமாக பாராட்டு தெரிவிக்காமல், அதன் விளைவுகள் தெரிய தொடங்கிவுடன் தவறை சுட்டிக்காட்டும் வகையில் கருத்து தெரிவித்த விஜய்க்கு இன்றைய ஒருவருட பணமதிப்பிழப்பு நாளில் சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments