தளபதி விஜய்யின் அடுத்த நிதியுதவி குறித்த தகவல்

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் தளபதி விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி செய்தார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதில் பிரதமர் நிவாரண நிதியாக ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சமும், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், புதுவை முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுபோக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் விஜய் பணம் அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் மூலமாக நேரடியாக மக்களுக்கு உதவிகள் சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது விஜய், தனது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.5000 அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த ஆவணங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல் சுமார் 1000 நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 அனுப்பியுள்ளதாகவும், இந்த பணத்தின் மூலம் தேவையான மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே புயல், வெள்ளத்தின்போதும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பணம் அனுப்பி பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சூரரை போற்று குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த

கொரோனா சிகிச்சை: சிகாகோவில் வெற்றிபெற்ற Remdesivir மருந்து சீனாவில் படுதோல்வி!!! நடந்தது என்ன???

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றதாகச் செய்தி வெளியிட்டது.

காற்று மாசுபாட்டினால் கொரோனா உயிரிழப்பு அதிகமாகிறதா??? உண்மை நிலவரம் என்ன???

கொரோனா நோய் பரவுவது குறித்தும் பாதிப்பு ஏற்படுவது குறித்தும் உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன

சென்னை, கோவை, மதுரையில் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி

சென்னை, கோவை, மதுரை ஆகீய மாநகராட்சிகளில் வரும் ஏப்ரல் 26 முதல் 29 வரையிலும், திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 28 வரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு

உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? கமல்ஹாசன் ஆவேசம்

கோவையில் அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக் கூறி ஆன்லைன் பத்திரிகை நிறுவனர் மற்றும் அவரது பத்திரிகையில் பணிபுரியும் இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி