சற்றுமுன் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' அறிக்கை

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பும், ரிலீஸ் ஆனதற்கு பின்பும் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்தாலும், இந்த படத்தின் வசூல் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன்னர் விஜய் இந்த படத்தின் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது

'மெர்சல்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுக்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றும் மிகப் பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மாபெரும் வெற்றியடைந்துள்ள 'மெர்சல்' திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பர்கள்(ரசிகர்கள், ரசிகைகள்), பொதுமக்கள் அனைவருக்கும் எனக்கும், மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.

மேலும், 'மெர்சல்' திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும் ஆதரவு கொடுத்ததற்கும் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'

இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

நெல்லை தீக்குளிப்பில் 4வது பலி: இசக்கிமுத்துவும் மரணம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவரின் குடும்பத்தினர் நான்கு பேர்களும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன் தினம் தீக்குளித்தனர்.

வரும் வெள்ளி முதல் மீண்டும் கெத்து காட்டும் மெர்சல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த புதன்கிழமை தீபாவளி அன்று வெளியாகி வசூலிலும் மெர்சல் காட்டியது என்பது அனைவரும் தெரிந்ததே.

2ஜி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

கடந்த 2010ஆம் ஆண்டு 2ஜி ஏலத்தில் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றஞ்சாட்டியதை இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது.

மேயாத மானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சுனாமியில் தப்பித்த ஒரே படம் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'மேயாத மான்'. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை

கமல்ஹாசன் மீதான நிலவேம்பு சர்ச்சை: மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காயச்சல் படுவேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.